2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வேலை கேட்டு அலுவலம் சென்ற சிங்கம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குஜராத் மாநிலம் ராஜுலாவில் தனியார் அலுவலகம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.

குறித்த அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் ஊழியர்கள் பணிபுரிந்துகொண்டு இருந்த போது திடீரென ஒரு சிங்கம் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளது.

இதனைச்  சற்றும் எதிர்ப்பார்க்காக  ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

அதே சமயம் குறித்த சிங்கமானது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று உலாவியதோடு பின்னர் தானாகவே குறித்த அலுவலகத்தை விட்டு  வெளியேறியது.

இது தொடர்பான சிசிடிவி கெமராக்  காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இவ் வீடியோவைப்  பகிரும் பலரும், "ஒருவேளை வேலைக்கேட்டு  குறித்த சிங்கம் அலுவலகத்திற்கு வந்திருக்குமோ" என நகைச்சுவையாகப்  பதிவிட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X