Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 02 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கைக்கான இறுதித் திகதி நிறைவடைந்தும் இதுவரை உள்ள 225 விவசாயிகளுக்கு சிறுபோக செய்கைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படாதா நிலை காணப்படுகின்றது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 13ஆயிரத்து 500 ஏக்கர் சிறுபோக செய்கைக்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான திகதிகளும் அறிவிக்கப் பட்டு பயிர் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிறுபோக செய்கைக்கு உள்வாங்கப்படாத பிரதேசங்களில் இருக்கின்ற விவசாயிகளுக்கு சிறுபோக செய்கைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை பயிர் செய்கை;க்கான காணிகள் வழங்கப்படாத நிலை கானப்படுகிகின்றது.
குறிப்பாக சிறுபோக செய்கைக்கு உள்வாங்கப்படாத பிரதேசங்களில் இருக்கின்ற விவசாயிகளிடமிருந்து நிலக்குத்தகையை கோருதல் நீர்பங்குளை கோருதல் போன்ற செயற்பாடுகளால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக மேற்படி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாள நிலையில் இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கைக்கான இறுதித் திகதி நிறைவடைந்தும் இதுவரை உள்ள 225 விவசாயிகளுக்கு சிறுபோக செய்கைக்கான 98.25 ஏக்கர் காணி பகிர்தளிக்கப்படாத நிலை காணப்படுகின்றது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago