Janu / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே 42 லட்சம் பெறுமதியுடைய, 28 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாவை 13 பொதிகளாக வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

51 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago