2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 000 வீடுகள் வழங்க நடவடிக்கை

Janu   / 2024 மார்ச் 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்திற்கு, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 000  சூரியமின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க வடக்கு மாகாணத்தில் முன்னர் வளங்கவெள தீர்மானிக்கப்பட்ட 25 000  வீட்டுத்திட்டத்திற்கு பதிலாக 50 000 வீடுகள் வழங்கவுள்ளதாக  அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு, அது நிறைவு செய்யப்படாதவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்திற்குள் உள்வாக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X