2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அம்மாச்சி உணவகம் திறந்து வைப்பு

Janu   / 2024 ஜூன் 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அம்மாச்சி உணவகமானது செவ்வாய்க்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் சங்கானை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அம்மாச்சி பாரம்பரிய உணவகமாக உருவாக்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக குறித்த உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நாடா வெட்டி வைக்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு உணவகம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் சம்பிரதாய முறைப்படி பால் அடுப்பை பற்ற வைத்து, தோசை சுட்டு உணவகத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் உள்ளூர் எழுத்தாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விசேட தேவையுடைய பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், விருந்தினர்கள், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X