2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Janu   / 2026 மார்ச் 26 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை மாகாண கல்வித் திணைக்களம் முறையாக பரிசீலிக்காது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து ஆசிரியர்கள் வியாழக்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான ஆசிரியர்கள் ஒன்று கூடி, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

முன்னதாக கஷ்ட பிரதேசங்களில் பணியாற்றியவர்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப சூழல் காரணமாக தூர இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் என பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல்முறையீடு செய்த போதிலும், அந்த முறையீடுகளை மாகாண கல்வி திணைக்களம் பொது சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சுமத்தினர்.

இதனை தொடர்ந்து, ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீயைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதன் பின்னர், குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தமது மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி தீர்வு எட்டப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு இல்லையெனில், தமது  ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

எஸ். நிதர்ஷன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .