R.Tharaniya / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில்தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் வியாழக்கிழமை(18) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறைதொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்குதெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும்பெற்றுத் தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம்தொடர்பாக வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.




க. அகரன்
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago