2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இந்திய உயர்தானிகர் நயினா தீவுக்கு விஜயம்

Mayu   / 2023 நவம்பர் 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று(30) நயினா தீவுக்கு சென்றுள்ளார்.

நயினா தீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும்
அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார். மேலும்  இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும்  விஜயம்செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X