Janu / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கோணாவில், ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் இளைஞனின் சடலமொன்று, திங்கட்கிழமை (25) இரவு 9 மணியளவில் கிடப்பதை கண்ட பொதுமக்கள், அதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச்சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மு.தமிழ்ச்செல்வன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .