2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உதைப்பந்தாட்டத்தில் மோதல்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

Janu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக்  சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றின்போது சில நபர்களுக்கிடையில் பாரிய மோதல் ஏற்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3)  பதிவாகியுள்ளது.

குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டி முடிவடைந்த நிலையில் சில நபர்களுக்கிடையில் மைதானத்தில் பாரிய மோதல்  இடம்பெற்று இருவர் காயமடைந்துள்ளதுடன் குறித்த இருவரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்று போட்டியாளர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை முடிந்து நீண்ட நேரத்தின் பின்னர் பொலிஸார் மைதானத்திற்கு வருகை தந்து, போட்டியை ஏற்பாடு செய்தவர்களை , பள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்தவர்களை மற்றும்  மைதானத்தைச் சூழ்ந்த பகுதிகளில் நின்றவர்களை  தடியினால் தாக்கியதாக மக்கள்  குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

லெம்பர்ட் றொஸரியன்

லெம்பர்ட் றொஸரியன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X