2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏ.ரி.எம் இயந்திரத்தை சேதப்படுத்திய விசமிகள்

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில், வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (02) இரவு புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் உள்ள உடையார்கட்டு சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில், புதுக்குடியிருப்பு இலங்கை வங்கியின் முகாமையாளரால், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட  விசாரணைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X