Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
போதைப் பொருளுக்கு அடிமையாகி, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் நேற்று (12) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவுக்கமைய செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியால், அவரது சடலத்தை ஊடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது, ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்தமையால், நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். சடலம் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025