2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கடலில் இரு படகுகள் மோதி விபத்து;ஒருவர் காயம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடி துறையில் இருந்து வெள்ளிக்கிழமை (15) அன்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகு ஒன்றும்,கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர் ஒருவரின் படகு ஒன்றும் மோதிய நிலையில் இரு படகுகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த படகுகளில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில்,மற்றைய படகு கடலில் மூழ்கிய நிலையில்,குறித்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் மூழ்கிய படகில் பயணித்த மீனவர் ஒருவர் சனிக்கிழமை (15) அன்று காலை சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த  இரு படகுகளின் உரிமையாளர்களும் குறித்த விபத்து குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர் தொழிலுக்குச் சென்ற மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்திரம் அவர்களின் மீன் வாடியில் வைக்கப்பட்ட நிலையில்,மற்றைய படகின் மீனவர்கள் தமது படகு சேதமானதை தெரிவித்து குறித்த வாடியின் கதவை உடைத்து வெளியிணைப்பு இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 எஸ்.ஆர்.லெம்பேட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X