Editorial / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்வியாழக்கிழமை (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் வியாழக்கிழமை (23) அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகு மூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசப் (44 வயது) என்பவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
உடனடியாக இன்னொரு படகு மூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
25 minute ago
32 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
2 hours ago
5 hours ago