R.Tharaniya / 2025 ஜூலை 07 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றுக் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்ற போதும் இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்திய வேளையும் எந்தவித. நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago