Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல் போன மீனவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது.
மருதங்கேணியைச் சேர்ந்த 61 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர் சனிக்கிழமை (16) அதிகாலை 4.00 மணியளவில் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இனந்தெரியாத படகு ஒன்று தெப்பத்தை மோதியுள்ளதுடன் , இதில் தெப்பம் கரையொதுங்கியுள்ள நிலையில் மீனவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காணாமல் போன மீனவரை தேடும் பணியில் அப்பகுதி மக்களும் கடற்படை சுழியோடிகளும் ஈடுபட்டிருந்த நிலையிலேயே சடலம் இவ்வாறு மருதங்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
சடலத்தை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் ஜெமில் பார்வையிட்டுள்ளதுடன்
தடயவியல் பொலிஸாரால் தடயங்கள் பெறப்பட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
மேலும் , இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
18 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago