Janu / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று சிறுப்பிட்டி பகுதியில் வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்த சம்பவம் வியாழக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்டதா என்பது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

18 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago