2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கலப்பைக்குள் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு

Janu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட மூன்றரை வயது சிறுவனான சிவலோகநாதன் விந்துஜன் உயிரிழந்துள்ளார்.

பனையாண்டான், நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை வயதுடைய  சிறுவன்  வீட்டுக்காணியினை உழவு செய்துகொண்டிருந்த போது உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் கடந்த 21.11.2023 அன்று சிக்குப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், அருகில் உள்ள மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (04) உயிரிழந்துள்ளார்.

செ.கீதாஞ்சன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X