Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வவுனியா, சமனங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த யுவதி மாலை கிணற்று மோட்டரை இயக்கிய நிலையில் அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்ததையடுத்து ள் அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர்உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெர்வித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
8 hours ago