Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைக்கடியகுளம் பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைகழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற, மிகவும் பின்தங்கிய எல்லைப்புற கிராமமாகக் காணப்படுகின்ற இந்தப் பாடசாலையிலிருந்து, முற்றுமுழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள், பல்கலைகழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், குறிப்பாக குறித்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் 2016 இல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில், கு.சுஜாந் (கிழக்கு பல்கலைக்கழகம் - கலைப்பீடம்), சி. சிறிமேனகன் (கிழக்கு பல்கலைக்கழகம் – கலைப்பீடம்), ஜெ. யசிந்தன் (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் – விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்) ஆகியவற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட சிறப்பு வீரர்களாகவும் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago