2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில் மீன்பிடி இடம்பெற்று வருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான சிறியமீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம்மீனினங்கள் இறந்தநிலையில் மீண்டும் கடலில்கொட்டப்படுவதாகவும் இதனால்தற்போது சிறுமீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் புதன்கிழமை (17) அன்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X