2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமாதானத்தின் முதற்படி கரித்தாஸ் வன்னி கியூடெக்

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் 'இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான  பொதுவான பார்வையை ஊக்கவித்தல்'  எனும்  செயற்றிட்டத்தின் கீழ், 2022 ஆண்டில் சர்வமதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, பல செயற்பாடுகள் இயக்குநர் அருட்தந்தை செபஜீபன் அடிகளாரின் தலைமையின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

சர்வமத ஒன்றிப்பின் மூலமே நாட்டின் சமாதானத்தை அடைய முடியும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட இச்செயற்றிட்டத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக,  ஆறு கிராமங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட சிறுவர்கள், இளைஞர்கள், பிரதேச மட்ட சர்வமத மேம்பாட்டுக்குழுக்கள் நிர்ணயிக்கப்பட்டு, சர்வமதங்களை வலுப்படுத்தல் எனும் நோக்கில் அவர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 சர்வமத சகவாழ்வு அரங்கத்தின் சர்வமத தலைவர்களின் வெளிக்கள ஒன்றுகூடலும் வெளிக்கள தரிசிப்பும் பல் சமயத் தலைவர்களினுடைய மக்கள் சந்திப்புகளால் மதவிழுமியங்கள் பகரப்பட்டதுடன் இந்நிகழ்ச்சித் திட்டம் நல்லுறவு பாலத்தை வலுப்படுத்தும் முகமாகவும் அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .