Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூலை 08 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி பயணித்த டிப்பர் மீது திங்கட்கிழமை (07) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து டிப்பர் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.
மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிஸார் சாரதியை தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago