Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Janu / 2024 மார்ச் 05 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாந்தனை இழந்து விட்டோம். எஞ்சியுள்ள மூவரையும் உயிருடன் மீட்பதற்கு இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என ,சாந்தனின் இறுதி கிரியையின் போது தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
" சாந்தனை எப்படியாவது காப்பாற்றி உயிருடன் அவரது தாயிடம் ஒப்படைத்து விடுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. அதற்காகவே கடுமையாக போராடினோம். எமது போராட்டங்கள் அனைத்தும் வீணாகி போனது.
இந்நிலையில் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன். நீங்கள் அனைவரும் , தமிழ் நாட்டிற்கு வந்து திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரையும் சந்தித்து , அவர்களின் நிலைகளை நேரில் பாருங்கள்.
தமிழக முதலமைச்சரை சந்தித்து அவர்களின் நிலைமைகள் தொடர்பில் எடுத்து கூறுங்கள். அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அவர்களை அனுப்பி , அங்கு அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதியுங்கள் என கோருங்கள்.
உடனடியாக அவர்களை , அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலைமைகள் காணப்பட்டால் , தமிழகத்தில் அவர்களின் உறவினர்கள் நண்பர்களுடன் செல்ல அனுமதிக்குமாறு கோருங்கள்.
சிறப்பு முகாமில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே அவர்களையும் உயிருடன் மீட்க முடியும். தமிழகம் சென்றதும் , அவர்கள் மூவரையும் விடுவிக்கும் சட்ட போராட்டத்தில் முழு வீச்சோடு நான் செயற்படுவேன்" தெரிவித்துள்ளார் .
எம் றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
4 hours ago