Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர்
ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஜக்கியம், திறன்விருத்தி
ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியில் சுன்னாகம் மயிலணி
சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
வெற்றிப்பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன் போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன,
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டதோடு, 3 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடமும்
அமைத்துவழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இப் போட்டியில் குறித்த பாடசாலை மாகாண மட்டத்தில் முதலிடம்
பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் நடன ஆற்றுகையும்
இந்நிகழ்வில் இடம்பெற்றது. மேலும் சிறப்பாகச் செயற்பட்ட கழகத்துக்கான
விருது தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago