2025 மே 13, செவ்வாய்க்கிழமை

டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கட​மைகளில் இருந்து விலகினர்

Mayu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள்  விலகியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது.

நிரந்தர நியமனம் மற்றும் நிலுவைகொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 1 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை முதல் நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 8ம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதர்ஷன் வினோத் 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X