Freelancer / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்துக்கு சனிக்கிழமை(10) முள்ளியவளையில் இருந்து கேக் வாங்க வந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி தவறி வீழ்ந்துள்ளது. இதை எடுத்த வெதுப்பக உரிமையாளர், இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தொலைத்தவர் தேடிவரும் வரை, அதைப் பத்திரமாக வைத்திருக்குமாறு வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ள நிலையில், தாலிக்கொடியைத் தொலைத்தவர்கள் வெதுப்பகத்துக்கு வருகைதந்த போது, வணிகர் சங்க தலைவர் முன்னிலையில் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, வெதுப்பக உரிமையாளரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெதுப்பகத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான தாலிக்கொடி தங்களுக்கு மீளவும் கிடைத்ததையிட்டு வெதுப்பக உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் குறித்த குடும்பத்தினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.
44 minute ago
49 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
17 Dec 2025
17 Dec 2025