2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

துயிலும் இல்ல காணியை விடுவிக்க போராட்டம்

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல  காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் இன்னொரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். 

இதில் தனியார் ஆக்கிரமித்த காணியை விடுவிக்கக் கோரி, நேற்று (18) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான மாவீரர்களின் உறவினர் சுமார் 400 பேர் உட்பட கிராம மக்களும் இணைந்து,   குறித்த இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து குறித்த பகுதியில் புதைகுளி அமைந்துள்ள பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X