Freelancer / 2022 நவம்பர் 08 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தேசிய ரீதியில் தமிழ்த்தின போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (17) இடம்பெற்றிருந்தது.
தமிழ் அறிவு வினாபோட்டி மற்றும் தமிழ் இலக்கண அறிவு போட்டி என்பனவற்றில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வே நேற்று இடம்பெற்றிருந்தது.
சாதனை மாணவர்கள் மல்லாவி நகர் பகுதியிலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பான்ட் வாத்தியங்கள், இசை கச்சேரிகள் முழங்க பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வில் வலய கல்வி பிரதிப்பணிப்பாளர், பாடசாலை முதல்வர், அயற்பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (a)

40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026