Janu / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம், நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சதுரங்க ஹேரத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப் பணிகளை முன்னெடுத்து வந்த குறித்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
க. அகரன்

17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025