Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தில் பொதுமக்கள், தனியார் கூட்டு உற்பத்தி திட்டத்தின் மூலம் செய்கை பன்னப்பட்ட நிலக்கடலை பயிரானது செவ்வாய்க்கிழமை (2) அறுவடை செய்யப்பட்டது.
கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் பங்கேற்போடு அறுவடை செய்யப்பட்டது.
நாட்டின் சம கால பொருளாதார நிலைமைகளைக் கருத்திற் கொண்டு விவசாயத்தினை தமது ஜீவனோபாயத் தொழிலாக முன்னெடுத்து வரும் குடும்பங்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பெயரில் (ILO) நிறுவனத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அறுவடை மூலம் பெறப்பட்ட நிலக் கடலையினை உரிய முறையில் பிரித்து எடுத்து பதப்படுத்தும் இயந்திரம் ஒன்று குறித்த பகுதி கமக்கார அமைப்புகளிடம் இராஜாங்க அமைச்சர் கையளித்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago