Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
சங்கு சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கூட்டணி, வேட்பு மனுக்கள் நிராகரிக்க பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டசியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் இரண்டு சபைகளை தவிர ஏனைய சபைகளுக்கு நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். இதில் எங்களுடைய பல சபைகள் நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இவ்வாறு நாங்கள் மாத்திரமல்லாமல் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் நிராகரிக்கப்பட்டதற்கு எமக்கு கூறப்படுகின்ற காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் தேவையான அனைத்தையும் நாம் வழங்கி இருக்கிறோம்.
ஆகையால் ஏதேனும் காரணங்களுக்காக எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தான் இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நீதிமன்றம் செல்வோம் என்றார்.
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025