Janu / 2026 மார்ச் 22 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 4,700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல் மற்றும் 400 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (22) அன்று ஊரெழுவிலுள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் விசேட சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது, பீப்பாய்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த எரிபொருட்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட எரிபொருட்களையும் சந்தேகநபரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ்.நிதர்ஷன்
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago