2026 ஜனவரி 31, சனிக்கிழமை

பளை விபத்தில் பெண் ஒருவர் பலி

Janu   / 2026 ஜனவரி 29 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. 

டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

பூ.லின்ரன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X