2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பஹல்கம் தாக்குதல்: யாழில். அஞ்சலி நிகழ்வு

R.Tharaniya   / 2025 மே 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் கடந்த (22.04.2025)ஆம் திகதி அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (30) அன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார்.

கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது அஞ்சலி உரையில், இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை அனுபவித்திருக்கிறோம்.

கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதோடு, இத்தகைய தாக்குதல்களை கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். 

இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்/நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X