2025 மே 15, வியாழக்கிழமை

பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை முறிப்பு பகுதியில் வயலுக்கு சென்ற இளைஞன் பாம்பு  தீண்டி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம்  வியாழக்கிழமை(06) இடம்பெற்றுள்ளது வயலை பார்க்க சென்ற முறிப்பு பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

பாம்பு  தீண்டிய இளைஞன் மயக்கமடைந்த நிலையில்   முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் குதிக்காலில் பாம்பு  தீண்டியதன் காரணத்தினால் விஷம் தலைக்கேறி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .