Janu / 2023 ஜூன் 19 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்டுவதற்காக சாராய போத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி சவல் என்பனவற்றை பயன்படுத்தி புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்ட வேளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவம் இடத்திற்க சென்ற முல்லைத்தீவு பொலிஸார் புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago