Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் உள்ள வீதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் உடமையில் இருந்து 400 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் சனிக்கிழமை (08) மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 22 மற்றும் 24 வயதுடைய நபர்கள் என பொலிஸார் கூறினார்.
குறித்த நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
செந்தூரன் பிரதீபன்
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago