Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
"மகிழ்ச்சி நிறைந்தபாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்குஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன்முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணியவித்தியாசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 26 ஆம் திகதிமேற்கொள்ளப்பட்டது.
"அழகானதீவு - புன்னகைக்கும் மக்கள்" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையைநனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாகமாற்றும் "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசியதிட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒருமுக்கிய பங்காளியாகும்.
குறித்த தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பட்ட மற்றும் சமூக மேம்பாட்டிற்கானஅடித்தளத்தை அமைக்கும் பாடசாலைகளில்; சுத்தமான, அன்பான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான, ஒழுக்கமான ,திறமையான, மற்றும் உற்சாகமான பாடசாலை சமூகத்தை உருவாக்குவதைநோக்கமாகக் கொண்டு,
தீவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உட்கட்டமைப்புமேம்பாட்டின் முதல் கட்டத்தின் கீழ், கடற்படையினர் 37 பாடசாலை வளாகங்களைமாணவர்களுக்கான கற்றல் நட்பு வளாகங்களாக மாற்றியமைத்தனர்.
அதன்படி, முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையை மாணவர்களின் கல்விக்குமிகவும் உகந்த சூழலாக மாற்றுவதற்குத் தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்கும்சுத்தம் செய்வதற்கும் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சமூக பராமரிப்புபங்களிப்பானது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ்நடைப்பெற்றது.
18 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago