Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு செம்பியன்பற்று தாளையடி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரீப்பர் ஒன்று மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் மருதங்கேணி பொலிஸாரால் வியாழக்கிழமை (20) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ரிப்பரில் பல ஆண்டுகளாக இராப் பகலாக மணல் கடத்தல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலைமையில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட மருதங்கேணி பொலிஸார் குடாரப்பு பகுதியில் வைத்து குறித்த ரிப்பர் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ரிப்பரையும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
23 Nov 2025
23 Nov 2025