Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 24 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (24) வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பு மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த குறித்த சுயேட்சை குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மேலும் கூறுகையில் - எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
யாழ் மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பில் சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி யாழ் மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்துள்ளோம். அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதர்சன் வினோத்
10 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
4 hours ago