Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, உருத்திரபும் பகுதியில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சந்தேக நபரை எதிர் வரும் 27ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் 13ஆம் திகதி, மரணவீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து, இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், வாள் வெட்டில் முடிந்தது.
சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட மூன்று சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டு 27ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
19 Jul 2025