Editorial / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
இன்று இரவு வெளியாகும் பிசிஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று (11) இனங்காணப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்த வர்கள் ஒருவர் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வசித்துவருபவர் ஆவார்.
உடுவில் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
எனினும், அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை ஒன்றையும் வைத்திருப்பதாகவும் அத்தோடு முச்சக்கர வண்டி சாரதிகள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அவரது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் அவருடைய கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவர்கள் தாமாக முன்வந்து தங்களை உடுவில் சுகாதார பிரிவினரிடம் பதிவு செய்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
எனவே சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தங்களுடைய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்
மேலும் இன்றைய தினம் 350பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது அந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இரவுவெளியாக உள்ளன அந்த முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மடசந்தையை மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .