Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்தது. குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்று மாலை (10.04) இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார்.
இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பராவார். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago