2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Janu   / 2025 மே 08 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்தில் புதன்கிழமை (07)  உயிரிழந்துள்ளார். 

எட்டாம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 43 வயதுடைய அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சண்முகம் தவசீலன்  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X