Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (08) அன்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதரக உதவித் தூதுவர் திரு. சங்கரன் இராஜகோபாலன், தூதரக அதிகாரிகளான திரு. என். ரவிசங்கர், திரு. எம்.பி. பெலியப்பா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களினால் துறைமுக அபிவிருத்தியின் அவசியம், தேவைப்பாடுகள் அதனால் ஏற்படும் சாதகங்கள், மீனவர்களுக்கான நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்து, அபிவிருத்தி தொடர்பாக இந்தியத் தூதரக அதிகரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்தரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத் திணைக்கள பொறியியலாளர், கடற்றொழி்ல் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
பு.கஜிந்தன்
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago