2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 9 மீனவர்கள் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் வியாழக்கிழமை (09)  இரண்டு படகுடன் கைது செய்யப்பட்ட ஒன்பது  மீனவர்களும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும்  16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புக்களில் சட்ட விரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மிக தீவிரமாக  சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கான அணி ஒன்று செயற்பட்டு வருகின்றது.

 அந்த வகையில் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் ஆகியோர் இணைந்து அண்மைய  நாட்களாக மிக தீவிரமாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X