2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

முல்லைத்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும், கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்  பணிப்பின் பேரில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச மற்றும் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர், மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இதன்போது மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டன.இதையடுத்து  முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்திற்கு விஜயம் செய்து, சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்படை ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினர்.

பின்னர் புல்மோட்டை கடற்படைத் தளத்திற்கு சென்று அங்குள்ள கடற்கடை அதிகாரி மற்றும் கரையோரப் பாதுகாப்பு அதிகாரியுடன் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் முகத்துவார வாயில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.இச்சந்திப்புகளில் அமைச்சரின்   பிரத்தியேக செயலாளரும் பங்கேற்றிருந்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X