2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முல்லையில் சட்டவிரோத தொழில்: எட்டு பேர் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு  முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் 

கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அதிகாரிகள்  மற்றும் மீனவ பிரதிநிதிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (06) இரவு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளையும் அதிலேயே தொழிலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் திங்கட்கிழமை (07) காலை கைது செய்து அவர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று திங்கட்கிழமை (07) இரவு  சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் மீன்பிடி படகு ஒன்று சுமார் 450 கிலோ கிராம் மீன்களுடன் செவ்வாய்க்கிழமை (08)  அதிகாலை கரைக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் குறித்த இருவரும்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை ஏப்ரல்16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை,   இந்த சட்டவிரோத மீன்பிடி படகை கடற்கரைக்கு  கொண்டு வருவதற்கு உதவி புரிந்த மீனவர்களின் பிரதிநிதிகளை தென்பகுதியில் இருந்து முல்லைத்தீவு வருகை தந்து குறித்த சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட  மீன்பிடி படகின் உரிமையாளர் தங்களை வீடியோ பதிவு செய்து சென்றதோடு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக  மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக நமது முல்லைத்தீவு கடலில் இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம்  தற்போது இந்த சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு இதை தொடர்ச்சியாக செய்து எங்களுடைய  வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X