2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழில்.கனடா கல்விக் கண்காட்சி ஆரம்பம்

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கனடா கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (30) அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா. செல்லத்துரை, மற்றும்  சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகரமற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்புடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்துதல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த  கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை - கனடா வணிக மன்றம் மற்றுமகனடா உயர் ஸ்தானிகராலயம், ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

நிதர்சன வினோத்

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X